Plant Wiki

Plant Wiki › Rosemary

ரோசுமேரி

Salvia rosmarinus · Rosemary

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

ரோசுமேரி
புகைப்படம்: Rosemary

ரோசு மேரி (ரோஸ் மேரி; Rosmarinus officinalis) என்பது தடித்த வாசம்மிகு பசுமை மாறா, ஊசி போன்ற இலைகளைக் கொண்ட பல்லாண்டு வாழக்கூடிய ஒரு மூலிகைத் தாவரமாகும். மத்திய தரைக்கடல் பகுதியைத் தாயகமாகக் கொண்ட இது ஈயெச்சக் கீரையின் (புதினா) குடும்பமான லாமியேசியைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் மேலும் பல மூலிகைகளும் உள்ளன. ரோசு மேரி எனும் பெயரானது இலத்தீன் மொழிப் பெயரான ரோஸ்மாரினஸ் என்பதிலிருந்துத் தருவிக்கப்பட்டதாகும். இதற்கு கடல் துளி என்று பொருள். (marinus - கடல்; ros - துளி) பல இடங்களில் இத்தாவரமானது நீரை விடுத்துக் கடல் காற்றின் ஈரப்பதத்தையே உயிர்வாழ எடுத்துக் கொள்கிறது. எனவே இப்பெயர் ஏற்பட்டது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை ரோசுமேரி, CC BY-SA 4.0.