Plant Wiki

Plant Wiki › Breadfruit

ஈரப்பலா

Artocarpus altilis · Breadfruit

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

ஈரப்பலா
புகைப்படம்: Breadfruit

ஈரப்பலா () அல்லது சீமைப்பலா (Artocarpus incisa) பலா இனத்தை சார்ந்த மரம் ஆகும். மலாயத் தீவக்குறை மற்றும் மேற்குப் பசிபிக் தீவுகளைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரம். ஆயினும் இது வெப்பவலயப் பகுதிகளில் வேறு பல இடங்களிலும் பரவலாக வளர்க்கப்படுகின்றது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தாவரவியல் மாதிரியாக எச் எம் எசு பவுண்டி என்னும் கடற்படைக் கப்பலினால் சேகரிக்கப்பட்ட இதனை, அக் கப்பல் தலைவனாக இருந்த வில்லியம் பிளை (William Bligh) என்பவர், மேற்கிந்தியத் தீவு களில் இருந்த பிரித்தானியரின் அடிமைகளுக்கான மலிவான உயர் ஆற்றல் தரக்கூடிய உணவாக அறிமுகப்படுத்தினார்.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை ஈரப்பலா, CC BY-SA 4.0.