ஆனைக்கொய்யா
Persea americana · Avocado
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
வெண்ணெய்ப்பழம் (தாவரவியல் பெயர்: Persea americana ), ஆனைக்கொய்யா, பால்டா, அவக்காடோ, வெண்ணெய்ப்பேரி, முதலைப்பேரி என பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது கரிபியன், மெக்சிகோ, தென்னமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா ஆகிய நாடுகளை பிறப்பிடமாகக் கொண்ட மரம் ஆகும். "ஆனைக்கொய்யா" என்பது மரத்தின் (தொழில்நுட்பரீதியாக பெரிய விதையைக் கொண்டிருக்கும் பெரிய பெரி) பழத்தையும் குறிக்கின்றது. ஆனைக்கொய்யாப் பழங்கள் முட்டைவடிவாகவோ, கோளவடிவாகவோ காணப்படுகின்றன. ஆனைக்கொய்யா பழங்கள் வணிக அடிப்படையில் மதிப்புமிக்கவையாகத் திகழ்கின்றன. மேலும், அவை உலகம் முழுவதும் வெப்பமான காலநிலையில் பயிரிடப்படுகின்றன. அவை பச்சைநிறத் தோலினையுடைய, அறுவடைக்குப் பின்னர் பழமாகிவிடுகின்ற பேரிக்காய் வடிவிலான பழத்தை உருவாக்குகின்றன. இம்மரங்கள், தன்மகரந்தச்சேர்க்கையையும் கொண்டுள்ளன. இருப்பினும் பழ மகசூல் அதிகரிக்க, ஒட்டுதல் மூலமாகவே, அதிக இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை ஆனைக்கொய்யா, CC BY-SA 4.0.